Aunty எதோ பூஜை செய்வார்கள். பார்க்க ஆசையாக இருக்கும். தினம் ஒரு சுண்டல் அல்லது ஒரு இனிப்பு கண்டிப்பாக இடம்பெறும். ஸ்லோகம் சொல்ல கிளம்பி choros ராகம் பாடி தினம் மாலை தெய்வீக மாலையாக நிகழும்.
இரண்டு நிமிட தூரத்தில் என் ஆசை SPB காலனி பிள்ளையார் அவ்வளவு அழகு பிள்ளையார். அங்கே உள்ள முருகன் கோயிலில் மிகப்பெரிய கொலு அலங்காரம் தினம் ஒரு இசை கட்சேரி நடக்கும். காலனி பிள்ளையார் முருகன் கோயில் எங்கள் காலனி வீடு எங்கள் அன்பு சுற்றத்தார் எல்லாரையும் மிகவும் miss செய்கிறேன்.
பல வருடம் பல இடங்களில் கொலு பார்த்தாலும் அன்று கொலு வைத்த அனுபவமும் இன்பமும் என்றும் கிடைத்ததே இல்லை.
ஐஷ்வர்யா ராம் & அவர்கள் குடும்பம் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை ஆனால் அவர்கள் வீட்டு கொலு & அவர்கள் எங்கள் மேல் கொண்ட அன்பும் என் மனதில் என்றும் நீங்காமல் நிறைந்து இருக்கும்..
#கொலு நினைவுகள்
#1095, SPB colony, Erode-638010